காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... - நீரில் மூழ்கிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Tamil nadu
By Nandhini Aug 04, 2022 01:51 PM GMT
Report

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துரை நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால், 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

சேலம் ஏற்காடு பகுதியில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இதனையடுதது, இன்று பிற்பகலில் மரப்பாலம் என்ற இடத்தில் காற்றாட்டு வெள்ளம் ஏற்பட்டது. நாகலூர், செம்மநத்தம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகின்றன. 

வெள்ள நீரில் மூழ்கிப்போன ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்

மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகமாக வந்துக் கொண்டிருப்பதால், முக்கொம்பு மேலனையிலிருந்து காவிரியில் 50 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 85 ஆயிரம் கன அடி நீரும் திறக்கபட்டிருக்கிறது.

இதனால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துரையில் உள்ள படிகட்டுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

flood -  Cauvery