நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம் - பிரபல சுற்றுலாதலம் அனுமதி!
நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கட்டலோனியா அனுமதி
ஸ்பெயின் நாட்டின் பிரபல தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கட்டலோனியா. இதன் தலைநகரமான பார்சிலோனா பிரபல சுற்றுலாதளங்களில் ஒன்று. 2020ல் பெண்கள் மேலாடையின்றி செல்வதற்கு கட்டலோனியா அனுமதி அளித்தது.
ஆனால், சில நகராட்சி நீச்சல் குளங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு நடைமுறைப்படுத்தவில்லை. தொடர்ந்து, இதுதொடர்பாக, கட்டலோனியா அரசாங்கத்தின் சமத்துவம் மற்றும் பெண்ணியம் துறை நகராட்சிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியது.
மக்கள் கொண்டாட்டம்
அதில், "பெண்கள் மேலாடையின்றி செல்வதை தடுப்பது, அவரவர்களின் உடல் தொடர்பாக ஒவ்வொரு நபரின் தேர்வுக்கான சுதந்திரத்தையும் மீறுவதும், மக்கள் தொகையில் இருந்து விலக்கி வைப்பதுமாகும். பாலினம், மத நம்பிக்கைகள், உடை உட்பட எந்தவொரு பாகுபாட்டிற்கு எதிராகவும் உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாக்க வேண்டும்.
தாய்ப்பாலூட்டுவதை அனுமதிக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும் நீச்சல் உடைகளை பயன்படுத்துவதையும் அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டவுன் ஹால் எனப்படும் மக்கள் கூடும் நகர மண்டபங்களில் உள்ள நீச்சல் குளங்களில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், சுமார் ரூ. 4 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
தற்போது பொது நீச்சல் குளங்களில் பெண்களை மேலாடையின்றி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.