இனி பெண்கள் பொதுவெளியில் மேலாடையில்லாமல் குளிக்கலாம் : புதிய அறிவிப்பை வெளியிட்ட நாடு

By Irumporai Mar 11, 2023 06:57 AM GMT
Report

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தற்போது கோடைக்காலம் தொடங்குவதால் நீச்சல் குளங்கள் , சூரிய குளியல் செய்யும் இடங்கள் தற்போதுகளை கட்ட தொடங்கியுள்ளது.

குறிப்பாக பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் , காரணம் நீச்சல் குளங்கள், உள்ளிட்ட இடங்களில் பெண்கள் மேலாடையின்றி இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இனி பெண்கள் பொதுவெளியில் மேலாடையில்லாமல் குளிக்கலாம் : புதிய அறிவிப்பை வெளியிட்ட நாடு | Germanys Nudist Culture Remains Woman

காரணம் என்ன

கடந்த டிசம்பர் மாதம் ஜெர்மனியில் ஒரு பெண் மேலாடையின்றி குளித்தமைக்காக நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் , இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைவரும் நீச்சல் குளத்தில் மேலாடையின்றி குளிக்க உரிமை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கருத்து

இது குறித்து ஜெர்மனியின் சமூக ஆரவலர்கள் கூறுகையில்பொதுவெளிகளில் நிர்வாணமாக இருப்பது உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மனிதர்களை நிர்வாணமாக பார்க்கப்பழகிவிட்டால் உடல் தோற்றம் குறித்த சிந்தனைகள் நம்மிடம் இருக்காது என்கின்றனர். மக்களை வெளித்தோற்றத்தை வைத்து இல்லாமல் உள்ளத்தை சீர்தூக்கி பார்க்க முயலலாம் எனவும் கூறுகின்றனர்.

ஜெர்மனியில் ஆண்களும் பெண்களும் மேலடையின்றி நீச்சல் குளங்களில் குளிக்கலாம் என்ற வரையறை 1918 முதல் 1933 வரை இருந்துள்ளது அப்போது கடற்கரையில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் மேலாடையின்றி குளித்துள்ளனர் . 1942 ஹிடலர் ஆட்சிக்கு பிறகு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு ஜெர்மன் முழுவதும் உடல் கலாச்சாரம் குறித்த புதிய விதிமுறை பரவியது.

தற்போது பெண்களும் மேலாடையின்றி நீச்சல் குளங்களில் குளிக்கலாம் என்ற புதிய சட்டம் மூலமாக மனிதர்களை உடல் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடும் நிலை மாறும் என கூறப்படுகின்றது