குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை; ஆண்மை நீக்கம் - சட்டம் நிறைவேற்றிய நாடு!
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கிழக்கு ஆப்பிரிக்கா, இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் எனும் தீவு நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம். இங்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு மட்டுமே 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில், கடந்த ஜனவரியில் மட்டும் 133 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
ஆண்மை நீக்கம்
அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. சட்டத்தின் விதிகளின்படி,10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கப்படும்.
அதே நேரத்தில், 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வன்கொடுமை செய்யப்பட்டால்,குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை அல்லது ரசாயன முறை மூலம் தண்டிக்கப்படுவார்கள். இது தவிர 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தால், ரசாயன முறை மூலம் காஸ்ட்ரேஷன் தண்டை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது ஹார்மோன் சுரப்பைத் தடுக்கவும், பாலியல் ஆசையைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
