தொடரும் சாதி வன்மம்..சட்டையை உருவி தாக்கிய சாதி வெறியர்கள்!! நெல்லையில் பயங்கரம்!!
நெல்லை மாவட்டத்தில் சாதியை கேட்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடரும் சாதி வன்மம்
நெல்லை மணி மூர்த்தேஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியை கேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள செய்தி வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றச்சாட்டிய நிலையில். கஞ்சா போதையில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தங்களை தாக்கி தங்களிடம் இருந்த பணத்தையும் அவர்கள் பறித்த சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுப்பட 6 பேர் கொண்ட கும்பல் காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கஞ்சா போதையில் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்கள் மனோஜ், மாரியம்மன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கைதானவர்கள் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்டவர் கூறும் போது, கஞ்சா போதையில் இருந்தவர்கள் கடுமையாக எங்களை தாக்கினர் என்று கூறி, தப்பித்து நிர்வாணமாகவே வீட்டுக்கு ஓடி வந்தோம் என கூறினார்.
மேலும், தங்களிடம் இருந்த 5000 ரூபாய், தங்களின் செல்போன், வெள்ளிச் சங்கிலி ஆகியவற்றை அவர்கள் பறித்து சென்றனர் என கூறிய அவர், சட்டையை கழற்றி எங்கள் மீது சிறுநீர் கழித்தனர் என தெரிவித்தார்.