சாக்கடையில் கட்டு காட்டாக கிடந்த பணம் - அள்ளி சென்ற மக்கள்!

Bihar
By Vinothini May 07, 2023 09:22 AM GMT
Report

பீஹார் கழிவு நீரில் கட்டு காட்டாக கிடந்த பணத்தை மக்கள் அள்ளி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாட்னா

பீஹார் மாநிலம், பாட்னா அருகே உள்ள சசாராம் பகுதியில் பாலத்திற்கு அடியில் ஓடும் கழிவுநீரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாலத்தில் கூடினர்.

cash-found-in-bihar-sewage-water

அங்கு கிடப்பது ரூபாய் நோட்டுகள் தான் என்பதை உறுதி செய்த அப்பகுதி மக்கள், சாக்கடைக்குள் இறங்கி பணத்தை அள்ள தொடங்கினர். அதில் 2000, 500, 100 ரூபாய் நோட்டுகளை அள்ளிச்சென்றனர். சம்பவ இடத்திற்கு, தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர், பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

விசாரணை

இந்நிலையில், போலீசார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அதில் சிலர் அவை உண்மையான பணம் தான் என்றும், ஒரு சிலர் போலியான தாள்கள் என்றும் கூறினர்.

மேலும், அப்பகுதியை சேர்ந்த ஒருவர், “காலை 8 மணியளவில், வாய்க்காலில் பணம் மிதப்பதைக் கண்டோம். அது போலியான பணம் என நினைத்தோம். பின்னர் அங்கு இருந்து சென்றோம். சிறிது நேரம் கழித்து நாங்கள் திரும்பி வந்தபோது பணம் எதுவும் மிதக்கவில்லை. இது உண்மையான ரூபாய் நோட்டுக்கள் என சிலர் கூறுகிறார்கள். சிலர் இது போலியான ரூபாய் நோட்டுகள் என கூறுகிறார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து, கழிவுநீரில் ரூபாய் நோட்டுகளை வீசியவர்கள் யார் என்றும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.