மிரட்டி பணம் பறிப்பு..நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக,
ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம்
இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக அளவில் நிதி திரட்டியதாகவும் இவற்றில் பெரும்பாலான நிதியை,
மிரட்டி வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.