அதிமுக மாநாடு நடக்குமா? தடை கோரி வழக்கு, ஷாக்கில் இபிஎஸ் - என்ன காரணம்?

Madurai Edappadi K. Palaniswami
By Sumathi Aug 17, 2023 03:14 AM GMT
Report

அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு தடை

சிவகங்கை, காரைக்குடியைச் சேர்ந்தவர் சேதுமுத்துராமலிங்கம். உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "மதுரை பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிரில் ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடக்கிறது.

அதிமுக மாநாடு நடக்குமா? தடை கோரி வழக்கு, ஷாக்கில் இபிஎஸ் - என்ன காரணம்? | Case Seeking Ban On Madurai Aiadmk Eps Conferrence

மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் மிக அருகில் உள்ளது. தினசரி அதிகளவில் விமானங்கள் வந்து செல்கின்றன. மதுரை விமான நிலையம் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளது.

என்ன காரணம்? 

அதிமுக மாநாட்டுக்கு சுமார் 15 லட்சம் பேர் வருவதாக கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் மாநாடு நடைபெறும் நாளில் விமானம் தரையிறங்கும் போது இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.

விமான நிலையத்தை சுற்றி 20 கி.மீ தொலைவிற்கு உரிய அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் விளம்பர பலகைகள் கூட வைக்க முடியாது.

மாநாட்டுக்கு அனுமதி பெற மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும். மாநாடு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட கோரப்பட்டுள்ளது.