Thursday, May 1, 2025

பெண் கொலை பற்றி அவதூறு - பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மீது பாய்ந்த வழக்கு!

BJP K. Annamalai
By Swetha a year ago
Report

பெண் கொலை பற்றி அவதூறு பரப்பியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் கொலை அவதூறு 

இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனிடையே கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண் தேர்தல் அன்று கொலை செய்யப்பட்டார்.

பெண் கொலை பற்றி அவதூறு - பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மீது பாய்ந்த வழக்கு! | Case Registered Against Annamalai

அவர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்ற காரணத்திற்காக திமுகவினர் அடித்தே கொலை செய்துவிட்டதாகவும் இணையத்தில் தகவல் பரவின. இதனை பாஜகவினர் பலரும் இந்தச் சம்பவத்திற்கு தங்கள் கண்டங்களைத் தெரிவித்தனர்.

அதேபோல பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்திற்குக் கண்டனம் தெரிவித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கமாறு வலியுறுத்தினார்.

பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க சர்ச்சை - என்ன பேசுனாலும் வன்மம் - அண்ணாமலை..!

பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க சர்ச்சை - என்ன பேசுனாலும் வன்மம் - அண்ணாமலை..!

அண்ணாமலை  வழக்கு

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட மோதலிலேயே கோமதி உயிரிழந்ததாக விளக்கமளித்தார்.

பெண் கொலை பற்றி அவதூறு - பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மீது பாய்ந்த வழக்கு! | Case Registered Against Annamalai

இந்த நிலையில், பொய்யான தகவல்களை பரப்பியதற்காக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் ஸ்ரீமுஷ்ணம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து பெண் கொலை வழக்கில் பொய் செய்தி பரப்பியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.