கருணாநிதி குறித்து அவதூறு..சீமான் மீது பாய்ந்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு!
சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவதூறு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர், கரூர் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சீமான் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கு
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பட்டியல் ஜாதி குறித்து அவதூறாக

பேசியது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil