அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு - சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவுக்கு நேரில் ஆஜராக சம்மன்.
சபாநாயகர் அப்பாவு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும்,
சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இந்த கருத்துக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் பாபு முருகவேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில்,
அதிரடி உத்தரவு
அ.தி.மு.க. குறித்து அவதூறு பரப்பியதாக, சபாநாயகர் அப்பாவு-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுவுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
மேலும் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.