விதிமீறி பேனர் - பரிசு டோக்கன்...பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்த காரணம்..?

Vijayakanth Tamil nadu DMDK
By Karthick Mar 19, 2024 04:44 AM GMT
Report

தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கட்சியினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

case-filed-against-premalatha-vijayakanth

இந்நிலையில் தான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

100 பழங்குடியின மக்களுடன் ஐநாக்ஸில் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த் - நெகிழ்ச்சி!

100 பழங்குடியின மக்களுடன் ஐநாக்ஸில் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த் - நெகிழ்ச்சி!

3 பிரிவுகளில்

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் பிரேமலதா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவாகியுள்ளது.   

case-filed-against-premalatha-vijayakanth

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தேமுதிக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தனது பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு இலவச தையல் பயிற்சிக்கான டோக்கன்களை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.