பிரியாணி போட்டியால் வந்த பெரும் சிக்கல் - உணவக மேலாளர் மீது பாய்ந்த வழக்கு!

Tamil nadu Coimbatore Tamil Nadu Police Biriyani
By Swetha Aug 30, 2024 08:00 AM GMT
Report

பிரியாணி போட்டி நடத்திய உணவக மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரியாணி போட்டி

கோவை ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகம் இயங்கி வருகிறது. அங்கு ஒரு சுவாரஸ்யமான பிரியாணி போட்டி நடைபெற்றது. அதாவது, ஆறு பிரியாணி சாப்பிட்டால் 1 லட்சம் ரூபாய் பரிசு என்றும்,

பிரியாணி போட்டியால் வந்த பெரும் சிக்கல் - உணவக மேலாளர் மீது பாய்ந்த வழக்கு! | Case Filed Against Kovai Biriyani Hotel Manager

நான்கு பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் ரூபாய் என்றும், மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி பரவிய நிலையில், உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர்.

30 நிமிடம்தான்..6 பிரியாணி சப்பிட்டால் ஒரு லட்சம் - மகனின் சிகிச்சைகாக தந்தை எடுத்த ரிஸ்க்!

30 நிமிடம்தான்..6 பிரியாணி சப்பிட்டால் ஒரு லட்சம் - மகனின் சிகிச்சைகாக தந்தை எடுத்த ரிஸ்க்!

உணவக மேலாளர்

அவர்கள் வந்த வாகனமும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வந்து செல்லும் முக்கியமான சாலை என்பதால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி நகர் முழுவதும் எதிரொலித்தது.

பிரியாணி போட்டியால் வந்த பெரும் சிக்கல் - உணவக மேலாளர் மீது பாய்ந்த வழக்கு! | Case Filed Against Kovai Biriyani Hotel Manager

இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி இருந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து போலீசார் உடனடியாக அபராதம் விதித்தனர். இந்த நிலையில், பிரியாணி போட்டி நடத்திய உணவக மேலாளர் கணேஷ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி போட்டியை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.