ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு பதிவு செய்தது பரபரப்பை ஏற்றப்படுத்தியுள்ளது.
உரிமை தொகை
தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் விண்ணப்பிக்கும்பொழுது பல பெண்கள் நிராகரிக்கப்பட்டனர். அவர்களுக்காக மேலும் விண்ணப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அக்டோபர் மாத தவணை தொகை இன்றே வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட இருக்கிறது. மாதந்தோறும் 15-ஆம் தேதிகளில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒரு நாள் முன்னதாகவே வங்கிக் கணக்குகளில் வரும் என்று குறிப்பிட்டனர்.
தற்பொழுது இந்த திட்டத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் உள்ள நிலையில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.