சூர்ப்பனகையுடன் ஒப்பீடு; மோடி மீது அவதூறு வழக்கு - கொந்தளித்த காங். முன்னாள் எம்பி
மோடி மீது அவதூறு வழக்கு தொடர்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரேனுகா சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அவதூறு வழக்கு
பிரதமர் மோடியைப் பற்றி அவதுாறாக பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராகுல் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதையடுத்து, அவரை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து, லோக்சபா செயலகம் உத்தரவிட்டது.
காங். எம்பி முடிவு
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, கடந்த, 2018ல் பார்லிமென்டில் பேசிய பிரதமர் மோடி, ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையுடன் என் சிரிப்பை ஒப்பிட்டு பேசினார். இதுவும் அவதுாறு தான்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கில் நீதிமன்றம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.