ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம் - 6 மாதம் சிறை தண்டனை?

Smt M. K. Kanimozhi Tamil nadu BJP H Raja
By Swetha Dec 02, 2024 09:34 AM GMT
Report

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

ஹெச். ராஜா

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது இணையத்தளப் பக்கத்தில் தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி இது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினரான கனிமொழிக்கு

ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம் - 6 மாதம் சிறை தண்டனை? | Case Against H Raja 6 Months Imprisonment

எதிராக அவதூறு கருத்து கூறியதாகவும் பல புகார்கள் காவல் நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மூன்று மாதங்களில் இந்த இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு நடைபெற்றது. இதில் பெரியார் சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், திமுக எம்பி கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும்,

என்னது ஹெச்.ராஜா மீது புகார் அளித்தால் பதவி நீக்கமா? அப்படி என்ன நடந்திருக்கும்?

என்னது ஹெச்.ராஜா மீது புகார் அளித்தால் பதவி நீக்கமா? அப்படி என்ன நடந்திருக்கும்?

தண்டனை?

அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஹெச். ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. இந்த இரண்டு வழக்கிற்கும் இன்று (டிச 2) தீர்ப்பளித்துள்ளார்.

ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம் - 6 மாதம் சிறை தண்டனை? | Case Against H Raja 6 Months Imprisonment

அதன்படி, "காவல்துறை தரப்பில் இருந்து ஹெச்.ராஜா குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இரு பதிவுகளும் ஹெச்.ராஜா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது" என நீதிபதி ஜி.ஜெயவேல் கூறினார்.

மேலும், ஹெச். ராஜாவை குற்றவாளி எனக் கூறி 6 மாத காலம் சிறை தண்டனை மற்றும் இரு வழக்குகளிலும் தலா ரூ. 5000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஹெச். ராஜா தரப்பில் கால அவகாசம் வேண்டுமென்றும் மேல்முறையீடு செய்தனர்.

அதன்படி, சிறை தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அபராத தொகை உடனடியாக செலுத்தப்பட்டது. இந்த ஒரு மாத காலத்திற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், தண்டனை அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.