ரூ.90 லட்சம் மோசடி; கணவரை தொடர்ந்து...நடிகை ஷில்பா ஷெட்டி மீது பாய்ந்த வழக்கு!
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லட்சம் மோசடி
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. கடந்த 2021ம் ஆண்டு இவர் ஆபாச படங்களை தயாரித்து அதனை மொபைல் செயலிகளில் பதிவேற்றியதாக புகார் எழுந்தது. அதன்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகை ஷில்பாவும், கணவர் குந்த்ரா ஆகிய இருவர் மீதும் மீண்டும் ஒரு வழக்கில் சிக்கியுள்ளனர். அதாவது, தங்க திட்டம் என்ற பெயரில் குறைந்த விலையில் தங்கம் விற்க இவை துவங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் தன்னிடம் 90 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகை மற்றும் அவரது கணவர் மீது, மும்பை வர்த்தகர் பிரித்விராஜ் சரேமல் கோத்தாரி என்பவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்த புகாரில்,நடிகை ஷில்பா ஷெட்டி,
பாய்ந்த வழக்கு
அவரது கணவர் ராஜ்குந்த்ரா உள்ளிட்ட சிலர் சத்யக் கோல்டு என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினர். அவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்செய்தால் குறைந்த விலைக்கு தங்கம் பெறலாம் என கூறினர். இதை நம்பி நான் அவர்களது நிறுவனத்தில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தேன்.
ஆனால் அவர்கள் சொன்னது போல தங்கமும் தராமல், எனது பணத்தையும் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டனர். மோசடியில் ஈடுபட்ட நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் மீது பி.கே.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக கூறினார். ஆகையால் அவர் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதான மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.