தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு ரத்து - நீதிமன்றம் தீர்ப்பு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த படத்தை நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கி இருந்தனர்.
இந்த படத்தில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த காட்சியில் புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை.
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.