இன்ஸ்டாகிராமில் பழக்கம் - 18 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிளஸ்-1 மாணவி!
பள்ளி மாணவி ஒருவர் 18 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகேயுள்ள சிற்றாறு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிளஸ்-1 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெருக்கமாக பழகி வந்த இருவரும் தங்களது ஆபாச புகைப்படங்களை பரிமாறியுள்ளனர்.
அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த வாலிபர். மேலும், மாணவியின் ஆபாச படங்களை தனது நபர்களுக்கும் அனுப்பியுள்ளார். இதையடுத்து வாலிபர்களின் நண்பர்களும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு
இதனால் பயந்துபோன மாணவி பள்ளிக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர், அவரை குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மாணவி கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல அமைப்பினர் பத்தனம்திட்டா போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியுடன் ஒன்றாகப் படித்து வந்த மாணவர்கள் உள்பட 18 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.