பாடப் புத்தகங்களில் இருந்து சீட்டுக் கட்டு கணக்குகள் நீக்கம் - என்ன காரணம்?

Government of Tamil Nadu
By Sumathi Jun 08, 2023 04:15 AM GMT
Report

தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து சீட்டுக்கட்டு கணக்குகள் பகுதி நீக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்கள்

தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகங்களில் பகடை மற்றும் சீட்டுக் கட்டு கணக்குகள் இடம்பெற்றுள்ளன. Probability எனப்படும் நிகழ்தகவை கையாளுவதற்காக இடம்பெற்றிருக்கும்.

பாடப் புத்தகங்களில் இருந்து சீட்டுக் கட்டு கணக்குகள் நீக்கம் - என்ன காரணம்? | Cards Mathematics Removed From Tamilnadu Textbooks

இதில் சீட்டுக்கட்டு கணக்குகள் மாணவர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் இருந்து சீட்டுக் கணக்கு பாடங்கள் நீக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 புதிய பகுதி 

பத்தாம் வகுப்பு பாடத்தில், சீட்டுக்கட்டு தொடர்பான 5 வினாக்கள் நீக்கப்பட்டு, புதிதாக 2 வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் நிகழ்தகவு பகுதியில் இது தொடர்பாக ஐந்து வினாக்கள் நீக்கப்பட்டு புதிதாக இரண்டு வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டு 8.1, பயிற்சி 8.3 எடுத்துக்காட்டு 8.27 எடுத்துக்காட்டு 8.30 பயிற்சி 8.4 ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு புதிதாக ஒரு கூடையில் உள்ள சிகப்பு மற்றும் மஞ்சள் நிற பூக்களில் மஞ்சள் மற்றும் சிகப்பு நிற பூக்களை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியம் என்ன என்பதற்கான கேள்வி இணைக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் புதிய பகுதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.