முதல்முறையாக இந்த நாட்டை சேர்ந்தவர் போப் ஆண்டவராக தேர்வு - யார் இவர்?

United States of America Pope Benedict XVI Vatican
By Sumathi May 09, 2025 06:13 AM GMT
Report

புதிய போப் ஆக ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய போப்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் தேதி காலமானார்.

cardinal robert francis

தொடர்ந்து வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் புதிய போப்பை தேர்வு செய்வதற்கான பணிகள் ரகசியமாக நடைபெற்றது. இதற்காக சுமார் 250 கார்டினல்கள் உலகம் முழுவதும் இருந்து வந்தனர். அதில் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே போப் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர்.

முதலில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் கரும்புகை வெளியேற்றப்பட்டது. இதையடுத்து ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், 2வது முறையாக கூடிய புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போதும் கரும்புகை வெளியிடப்பட்டது.

உலகின் அதிபயங்கர சிறைச்சாலை; நடுக்கடலில் திகில் - மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

உலகின் அதிபயங்கர சிறைச்சாலை; நடுக்கடலில் திகில் - மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

யார் இவர்? 

இந்நிலையில் தற்போது புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வெண்புகை வெளியேற்றப்பட்டது. இதனை பார்த்ததும் தேவலாயத்தை சூழ்ந்து இருந்த மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் லியோ XIV என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

முதல்முறையாக இந்த நாட்டை சேர்ந்தவர் போப் ஆண்டவராக தேர்வு - யார் இவர்? | Cardinal Robert Francis Elected New Pope Deatils

பிரெஞ்சு மற்றும் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த 69 வயதான அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், சிகாகோவில் பிறந்தார். 2023 முதல் ஆயர்களுக்கான டிகாஸ்டரியின் தலைவராகவும், லத்தீன் அமெரிக்காவிற்கான போன்டிஃபிகல் கமிஷனின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

செயிண்ட் அகஸ்டின் ஆணை உறுப்பினரான பிரீவோஸ்ட், பெருவில் பல தசாப்தங்களாக மிஷனரியாக இருந்தவர். பெருவின் சிக்லாயோவின் பிஷப்பாக (2015–2023) இருந்தார். சிஸ்டைன் சேப்பல் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வருவதைக் கண்ட சுமார் 70 நிமிடங்களுக்குப் பிறகு,

செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மைய பால்கனியில் புதிய போப் தோன்றினார். பின் "உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்" என்று கூறினார். வரலாற்றில் முதல் அமெரிக்காவை சேர்ந்தவர் போப்பாண்டவர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.