நடனமாடும் போதே ஏன் பலர் இறக்கின்றனர் தெரியுமா? விவரம் இதோ!
நடனமாடி கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் இறப்பது குறித்த காரணங்களை தெரிந்துக்கொள்வோம்.
இதய செயலிழப்பு
இதய செயலிழப்பில் இரண்டு வகை உள்ளது. முதலாவது ஹார்ட் அட்டாக் இதயம் செயல்படும் வேகம் படிப்படியாக குறைகிறது. இதனால் ஒருவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மற்றொன்று கார்டியாக் அரெஸ்ட். இதயம் செயல்படுவது சட்டென்று நின்றுவிடுகிறது. உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. நடனமாடும் போது, இதயம் உடல் பாகங்களுக்கு வேகமாக ரத்தத்தை அனுப்ப வேண்டும். ஆனால் போதுமான ரத்தம் வந்தால் மட்டுமே ரத்தத்தை பம்ப் செய்து உடல் பாகங்களுக்கு இதயத்தால் அனுப்ப முடியும்.
அதிகரிக்கும் உயிரிழப்பு
ரத்த ஓட்டம் குறைந்துவிட்டால், இதயம் நின்றுவிடும். எனவே தான் நடனமாடினாலும் சரி, உடற்பயிற்சி செய்தாலும் சரி, ஒரே நேரத்தில் அதீத விஷயங்களை செய்ய கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. நெரிசல் மிக்க இடங்களில் இருக்கும் போது உடலில் உள்ள நீர் காற்றில் கலந்து நீர்ச்சத்து குறைகிறது.
क्या पता मौत कभी भी आ सकती है।
— Khinyaram Bhadoo (@Kram4barmer) February 9, 2025
स्टेज पर डांस करते करते अचानक गिर पड़ी युवती और फिर हो गई मौत !! pic.twitter.com/RKeamSCGbQ
ரத்த ஓட்டத்தில் வேறுபாடு ஏற்படும். இது இதய பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இந்த பாதிப்பு ஹார்ட் ஸ்ட்ரோக் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு நிகழும்போது, சரிந்து விழுந்து இறந்து விடுகிறார்கள்.
வலிப்பு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்களின் உடலில் திடீரென ரத்த ஓட்டம் குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, அது அவர்களுக்கு இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே இந்த பாதிப்புள்ளவர்கள் நடனமாடாமல் இருப்பது நல்லது.