இறந்ததாக ஒட்டப்பட்ட போஸ்டர்; திடீரென கண் முழித்த நபர் - மிரண்ட உறவினர்கள்!
இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் கண்விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்விழித்த நபர்
கர்நாடகா, ஷிகானின் பங்காபுராவைச் சேர்ந்தவர் பிஷ்டப்பா குடிமணி(45). இவர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மதுப்பழக்கத்தால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.
எனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடலை குடும்பத்தினர் ஆம்புலன்சில் ஏற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அதிர்ச்சியில் குடும்பம்
அப்போது வாகனத்தில் சென்ற மனைவியும், மகன்களும், "அப்பா நீங்கள் விரும்பி சாப்பாடு சாப்பிடும் தாபா செல்கிறதே" என அழுதபடி கூறியுள்ளனர். இதைக் கேட்ட பிஷ்டப்பாவின் உடலில் அசைவு ஏற்பட்டு கண் விழித்துள்ளார்.
உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அவர் இறப்பு குறித்து ஒட்டிய போஸ்டர்களை உறவினர்கள் அகற்றியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.