15 அடி ஆழ கிணற்றில் விழுந்த கார்.. சிக்கிய புதுமண தம்பதி -அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

Viral Video Kerala India Accident
By Vidhya Senthil Oct 14, 2024 04:30 PM GMT
Report

  15 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்து தலைக்குப்புற கார் விழுந்ததில் புதுமண தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிள்ளர்.

கேரளா 

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 27) திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

kerala

இவரது மனைவி விஸ்மயா(26). இவர்களுக்குக் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி கார்த்திக் தனது மனைவி விஸ்மயாவை அழைத்துக் கொண்டு காரில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பசுவை தடவினால் Bp குறையும்..தொழுவத்தில் படுத்தால் புற்றுநோய் குணம்..அமைச்சர் சர்ச்சை!

பசுவை தடவினால் Bp குறையும்..தொழுவத்தில் படுத்தால் புற்றுநோய் குணம்..அமைச்சர் சர்ச்சை!

அப்போது பாங்கோடு என்ற பகுதியில் கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது பள்ளத்தில் கார் வேகமாக இறங்கி, ஏறியது. இதில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடத்தொடங்கியது. சாலையோரத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு 15 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தலைக்குப்புற கிணற்றுக்குள் விழுந்தது.

 உயிர் தப்பிய சம்பவம்

5 அடி வரை தண்ணீர் இருந்ததால் கார் உடையவில்லை. இதனிடையே காருக்குள் இருந்த தம்பதி, கிணற்றுக்குள் கத்தி கூச்சலிட்டவே சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எர்ணாகுளம் மாவட்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

 kerala Couple fell with car

தகவலின் அடிப்படையில் காவல்துறை, தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். காரில் சிக்கியிருந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி விஸ்மயா ஆகியோரை நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் மீட்டனர்.

மேலும் காருக்குள் இருந்த 2 பேரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் எந்த காயம் இன்றியும், கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிள்ளர்.