தப்பான வழிக்காட்டிய map.. கவிழ்ந்த கார் - மூன்று இளைஞர்கள் பலி!
தவறாக வழி காட்டியதால் கார் கீழே கவிழ்ந்து மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
கவிழ்ந்த கார்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஜிபிஎஸ், கூகுள் மேப்பை பயன்படுத்தி தான் வாகனத்தை ஓட்டுகின்றனர். கார் அல்லது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த மேப் எளிமையாக இருப்பதால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், சில நேரங்களில் அது தவறான வழிகளை காட்டி, விபத்துகளும் நடக்கின்றன. இந்த சுழலில், உத்தர பிரதேச மாநிலம் ஃபருகாபாத்தைச் சேர்ந்த விவேக் குமார், அமீத் ஆகிய சகோதரர்கள், தங்களுடன் இன்னொருவரை அழைத்துக்கொண்டு டதாகஞ்ச் என்ற இடத்திற்கு காரில் பயணம் மேற்கொண்டனர்.
இதனிடையே வழியை தெரிந்துக்கொள்ள கூகுள் மேப்பை ஆன் செய்துவைத்து அது காட்டும் வழியில் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். ஃபரித்பூர் என்னும் இடத்தில் செல்லும்போது ஜிபிஎஸ் தவறான வழியைக் காட்டியுள்ளது.
இளைஞர்கள் பலி
அதை சரியான வழி என நம்பிச் சென்ற மூவரும் பயணித்த நிலையில், இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் பாலத்திற்கு கொண்டு சென்றது. பாலத்தின் மீது பயணித்துக்கொண்டு இருந்த கார் திடீரென பாதியோடு பாலம் முடிந்ததால் 50 அடிக்கு கீழே ஓடும் ஆற்றில் விழுந்தது.
இந்த தகவலறிந்து விரைந்த கிராம பொதுமக்கள், காரை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்தனர். அதற்குள் காருக்குள் இருந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு உடள்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
மூவரும் உயிரிழந்த தகவல் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. கூகுள் மேப்பை நம்பிதான் அவர்கள் காரை ஒட்டிச் சென்றதாகக் குறிப்பிட்ட குடும்பத்தினர், அரசு நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.