ஓடும் காரில் குழந்தை பெற்ற பெண் - அதிர்ச்சி கொடுத்த கார் நிறுவனம்!
ஓடும் வாடகை காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு, கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது.
காரில் பிரசவம்
இங்கிலாந்து, தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் பாரா காகனிண்டின்(26). இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தொடர்ந்து, வழக்கமான பரிசோதனைக்காக அந்தப் பெண் மருத்துவமனைக்கு வாடகை காரில் சென்றுள்ளார்.

அப்போது கார் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் சென்றுள்ளது. திடீரென பாராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து காரிலேயே அவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். உடனே கார் மருத்துவமனைக்கு சென்றதும், மருத்துவர்கள் தாயையும், குழந்தையயும் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
பெண்ணுக்கு அபராதம்
இருவரும் தற்போது நலமாக உள்ளனர். இதற்கிடையில், காரில் குழந்தையை பெற்றெடுத்ததால், அதில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணம் கூறி அந்தப் பெண்ணுக்கு கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது.

அதன் அடிப்படையில், 60 பவுண்டு, சுமார் ரூ.5,700 செலுத்த வேண்டுமென கார் நிறுவனம் அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.