குழந்தை பெற்றெடுத்த 12 வயது சிறுமி ; அண்ணனே பலாத்காரம் செய்த கொடூரம் - வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்

sexualassault nellurcrime minorimpregnated andhracrime
By Swetha Subash Apr 13, 2022 10:29 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த 50 வயது விவசாயிக்கு முதல் மனைவியுடன் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்தனர்.

குழந்தைகளை கணவரிடம் விட்டு சென்ற நிலையில் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இரண்டாவது மனைவியுடன் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் 12 வயதான அந்த சிறுமி கொரோனா காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். தந்தையும் தாயும் விவசாய வேலைக்கு சென்றுவிட வீட்டில் சிறுமி மட்டும் தனிமையில் இருந்துள்ளார்.

குழந்தை பெற்றெடுத்த 12 வயது சிறுமி ; அண்ணனே பலாத்காரம் செய்த கொடூரம்  - வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம் | Minor Impregnated By Brother Delivers Baby

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முதல் மனைவிக்கு பிறந்த மகன் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் சிறுமி கரப்பமடையவே இந்த விவகாரம் தாய் தந்தை இருவருக்கும் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் குடும்ப பெயர் கெட்டுவிடும் என்பதற்காக மூடி மறைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

மைனரான சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இது குறித்து நெல்லை சைல்ட் ஹெல்ப் லைன் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் அண்ணனே அவரை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.