விஜய்க்கு அபராதம் விதிக்கக்கூடாது- வழக்கை முடித்த உயர்நீதிமன்றம்

Vijay Chennai
By Sumathi Jul 15, 2022 06:18 AM GMT
Report

சொகுசு காரை இறக்குமதி செய்தது தொடர்பாக நடிகர் விஜய் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

  சொகுசு காருக்கு வரி

நடிகர் விஜய், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள BMW X5 சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.

actor vijay

இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது.

வரி செலுத்த வணிக வரித்துறை உத்தரவு

இதைதொடர்ந்து, விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. அதே சமயம் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டும் என

விஜய்க்கு அபராதம் விதிக்கக்கூடாது- வழக்கை முடித்த உயர்நீதிமன்றம் | Car Case Vijays Case Closed Chennai High Court

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

 விசாரணை

நடிகர் விஜய் தரப்பு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும்,ஆனால்

னக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாக்கல் செய்தது. வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

 தீர்ப்பு

இறக்குமதி காருக்கு 2019-க்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்திநிருந்தால் அபராதம் விதிக்க கூடாது என்றும், மேலும் 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரி செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என்றும் கூறி இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முடித்து வைத்துள்ளார்.