லாரி மீது நேருக்கு நேர் மோதி நசுங்கிய கார்.. குழந்தை உட்பட 7 பேர் பலி - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
கார் ஒன்று லாரி மீது மோதியதால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள அந்தனூர் பகுதி பைபாஸ் சாலையில், லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. அதில் காரில் இருந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். லாரி டிரைவர் விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்து தப்பியோடினார்.
பின்னர் அந்த கார் முன்பகுதி முழுவதுமாக லாரியில் சிக்கி நசுங்கியது, அதனால் தீயணைப்புத்துறையினரும் போலீஸாரும் சிரமப்பட்டு உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாரணம்
இந்நிலையில், அந்த காரில் இருந்த நபர்கள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், மகாளய அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரிலுள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊர்த் திரும்பியதாக கூறப்படுகிறது.போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த காயமடைந்த மேலும் ஒரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.2 லட்சமும் காயமடைந்து சிகிச்சையில் இருப்போருக்கு ரூ.1 லட்சமும் அறிவித்துள்ளார்.