மோசமான சாலை.. பலியான இன்ஜினியர் : சம்பவம் தொடர்பாக இருவர் கைது

By Irumporai Jan 04, 2023 01:17 PM GMT
Report

சென்னை மதுரவாயல் என்ற பகுதியில் மென் பொறியாளர் ஷோபனா நேற்று காலை தன் இரு சக்கர வாகனத்தில் தன் தம்பியை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

மோசமான சாலை

அப்போது, சர்வீஸ் சாலை குண்டும் குழியுமான இருந்ததால், பள்ளத்தைத் தவிர்க்க ஷோபனா முயன்றபோது, முந்திச் செல்ல முயன்ற வேன் ஒன்று இவரது வாகனம் மீது மோதியதில், ஷோபனா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது பின்னார் வந்த லாரி மோதியதில் லாரி சக்கரத்தில் சிக்கி சோபனா(20) பலியானார்.

மோசமான சாலை.. பலியான இன்ஜினியர் : சம்பவம் தொடர்பாக இருவர் கைது | 2 People Arrested In The Case

உயிர் பலி வாங்கிய சாலை

இந்த விவகாரத்தில் பார்த்திபன், மோகன் ஆகிய 2 ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மோசமான சாலையால் எங்கள் ஊழியரை இழந்துவிட்டதாக பெண் இன்ஜினியர் பணியாற்றிய நிறுவனத்தின் சி இ ஓ ஸ்ரீவேம்பு தெரிவித்துள்ளார்.