தொடர் சிகிச்சையில் கேப்டன் விஜயகாந்த்.. இப்போ என்ன நிலைமை? - மருத்துவர்கள் தகவல்!
நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரது நலப்பணிகளுக்காக இவரை ரசிகர்கள் கருப்பு எம்ஜிஆர் என்று அன்புடன் அழைப்பர். இவர் சினிமாவில் இருந்து விலகி தேமுதிக என்கிற கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார்.
இவர் இரண்டாவது தேர்தலிலேயே எதிர்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் இடம்பிடித்து அரசியலில் பெரும் பங்கு வகித்தார். பின்னர், இவர் உடல்நிலை குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்து வருகிறார், அதனால் இவரது அரசியல் கட்சியில் பின்னடைவு ஏற்பட்டது.
தொடர் சிகிச்சை
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருந்ததால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு தொடர்ந்து 3ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பால் கேப்டன் விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளனர்.