எப்படி இருந்த அவர் இப்படி ஆயிட்டாரே! விரல்கள் அகற்றம்…உடல் மெலிந்து போன விஜயகாந்த் சோகத்தில் தொண்டர்கள்
தேமுதிக பொதுச் செயலாருளம் நடிகருமான விஜயகாந்தின் விரல்கள் அகற்றப்பட்ட நிலையில், உடல் மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி அவரது தொண்டர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
சினிமாவில் அறிமுகம்
1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த். அதை தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக வலம் வந்தார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்சன் ஹிரோவாக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரம் என்றாலே முதல் தேர்வு விஜயகாந்த் தான். இவர் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த பின் ஹீரோ முதல் அனைவரும் ஒரே மாதிரியான சாப்பாடு வழங்க வேண்டும் என முன்னெடுத்தவர் விஜயகாந்த்.
எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்த விஜயகாந்த்
தனது அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் உணவு வழங்கி வந்தார். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் விஜயகாந்த் வலம் வந்தார்.
தொடர்ந்து நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நஷ்டத்தில் இருந்த சங்கத்தை மீட்டார். பின்னர் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கினார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்க்கட்சியாக அமர்ந்தார். பின்னர் தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
எப்படி இருந்த அவர் இப்படி ஆயிட்டாரே!
தற்போது நடக்க முடியாமல் தன்னுடைய வேலைகளை கூட தன்னால் செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
அறிக்கையை பார்த்து பெரும் அதிர்ச்சியில் உள்ள அவரது ரசிகர்களுக்கு மீண்டும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சிங்கம் போல் கம்பீரமாக கர்ஜித்து வந்த அவர் உடல் மெலிந்து காணப்படும் அந்த புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.