பெரிய ஹீரோவா நீ..? சர்ஃபராஸை எச்சரித்த ரோகித் ஷர்மா - வைரலாகும் Video!

Rohit Sharma Cricket Viral Video Indian Cricket Team Sports
By Jiyath Feb 26, 2024 07:36 AM GMT
Report

இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா, இளம் வீரரான சர்ஃபராஸ் கானை எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி கடைசி இன்னிங்ஸை எட்டியுள்ளது.

பெரிய ஹீரோவா நீ..? சர்ஃபராஸை எச்சரித்த ரோகித் ஷர்மா - வைரலாகும் Video! | Captain Rohit Sharma Warns Sarfaraz Khan

இந்நிலையில் போட்டியின்போது இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா, இளம் வீரரான சர்ஃபராஸ் கானை எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளுக்கு 142 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

இலங்கை அணி கேப்டனுக்கு விளையாட தடை; ICC எடுத்த அதிரடி முடிவு - என்ன நடந்தது?

இலங்கை அணி கேப்டனுக்கு விளையாட தடை; ICC எடுத்த அதிரடி முடிவு - என்ன நடந்தது?

எச்சரித்த ரோகித் 

அப்போது ரோகித் ஷர்மா, ஷோயப் பஷீருக்கு நெருக்கமாக ஃபீல்ட் செட்டிங்கை மாற்றினார். ஷோயப் பஷீருக்கு அருகில் ஷார்ட் லெக் பீல்டிங்கில் நிற்க சர்ஃபராஸ் வந்தார். அவர் ஹெல்மெட் அணியாமல், குல்தீப் யாதவிடம் பந்து வீசுமாறு கூறியபோது குறுக்கிட்ட ரோகித் "இரு ஹெல்மெட் வந்துவிடும்” என்று கூறினார்.

பெரிய ஹீரோவா நீ..? சர்ஃபராஸை எச்சரித்த ரோகித் ஷர்மா - வைரலாகும் Video! | Captain Rohit Sharma Warns Sarfaraz Khan

அதற்கு “பரவாயில்லை 2 பந்துகள் தானே” என சர்ஃபராஸ் தெரிவித்தார். உடனே அவருக்கு அருகில் வந்த ரோகித் ஷர்மா "“ஹீரோவாக இருக்க முயற்சிக்காதே, முதலில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு ஃபீல்டிங் செய்” என்று எச்சரித்தார்.