'கேப்டன் மார்வெல்' பட நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!
கேப்டன் மார்வெல் படத்தில் காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்த நடிகர் கென்னெத் மிட்ச்செல் காலமானார்.
கென்னெத் மிட்ச்செல்
கேப்டன் மார்வெல் திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது. இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தனர்.

அதில் காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்தவர் தான் கென்னெத் மிட்ச்செல் (49). மேலும், ஸ்டார் ட்ரெக் டிஸ்கவரி உள்பட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
காலமானார்
கென்னெத் மிட்ச்செல் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்ளெரோசிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். கென்னெத் மிட்ச்செல்லின் மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan