உயிரை காக்க ‘மின்னணு சிப்’; அறிமுகம் செய்யும் நேபாள அரசு - விலை தெரியுமா..?

Nepal World
By Jiyath Feb 26, 2024 09:47 AM GMT
Report

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது காணாமல் போகும் வீரர்களை கண்டுபிடிக்க 'மின்னணு சிப்' ஒன்றை நேபாள அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

எவரெஸ்ட் சிகரம் 

உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தவர்களும் உள்ளனர். ஏறும் வழியிலேயே உயிரிழந்தவர்களும் உள்ளனர். 1953 முதல் இதுவரை சுமார் 300 நபர்கள் எவரெஸ்டில் ஏற நினைத்து உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

உயிரை காக்க ‘மின்னணு சிப்’; அறிமுகம் செய்யும் நேபாள அரசு - விலை தெரியுமா..? | Nepal Electronic Chips For Mount Everest Climbers

இந்நிலையில் சிகரம் ஏறும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் நேபாள அரசு இறங்கியுள்ளது. அதற்காக புதிய திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

65 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி தீவு; கார்களுக்கு அனுமதியில்லை - எங்கு உள்ளது தெரியுமா?

65 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி தீவு; கார்களுக்கு அனுமதியில்லை - எங்கு உள்ளது தெரியுமா?

மின்னணு சிப்

இது குறித்து பேசிய நேபாள சுற்றுலாத் துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங், "எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மலையேறும் வீரர்களுக்கு அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில், கட்டண முறையில் அரசாங்கத்தால் மின்னணு சிப் வழங்கப்படும்.

உயிரை காக்க ‘மின்னணு சிப்’; அறிமுகம் செய்யும் நேபாள அரசு - விலை தெரியுமா..? | Nepal Electronic Chips For Mount Everest Climbers

இதன்மூலம் அவசர காலங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணியை விரைவாகவும் எளிதாகவும் செய்ய இயலும். இதில் ஒரு சிப்பின் விலை தோராயமாக $10-$15 வரை (இந்திய மதிப்பில் ரூ. 800 - 1,300 வரை) இருக்கும். கட்டாயம் இதை அவர்கள் அணியவேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.