என்னால் பதவிய விட்டு விலக முடியாது : கோட்டாபய ராஜபக்ச பரபரப்பு
இன்னும் இரண்டு ஆண்டுகள் இலங்கையினை ஆட்சி செய்வேன் என்றும் , தனது அதிபர் பதவியினை விட முடியாது என்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போராட்டக் களாமான இலங்கை
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,இதனால் இலங்கையில் உள்ள பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தினர்.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜ பக்சே குடும்பம்தான் காரணம் என்று மக்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் கலவரம் காரணமாக மகிந்த ராஜ பக்சே பதவி விலகிய நிலையில் தற்போது புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தொடர்கின்றார்.
பதவியை விட்டு விலக முடியாது
இந்த நிலையில், தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்தது ஒரு ஆண்டிற்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என கூறிய அதிபர் நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா நாடுகளிடம் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபரின் அதிகாரங்களைப் பறித்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தம் கொண்டு வரப்படும் என்பது முக்கிய அறிவிப்பாக வெளியான நிலையில் அந்த சட்டதிருத்தம் நிறைவேற்ற முடியவில்லை .
தற்போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அதிபரின் அறிவிப்பு மீண்டும் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடும் நெருக்கடியில் இலங்கை : வரிகளை உயர்த்த அரசு அறிவிப்பு