இலங்கையில் மருத்துவ சேவைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்கள் வழங்கிய இந்தியா

By Irumporai Jun 03, 2022 07:37 PM GMT
Report

இலங்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா  வழங்கியுள்ளது.

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது , இந்த நிலையில்  இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது

இலங்கையில் மருத்துவ சேவைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்கள் வழங்கிய இந்தியா | 3 Tonnes Of Medical Ambulance Sri Lanka

இந்த இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவை முக்கிய பங்காற்றிய நிலையில் இலங்கையில் உள்ள இந்தியாவின் உயர் ஆணையம் தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில் :

"உயிர்காக்கும் இச்சேவை சுமூகமாக இயங்குவதற்கு ஆதரவளிப்பதற்காக உயர் ஸ்தானிகர் 3.3 தொன்கள் மருந்துகளை இன்று கையளித்தார்.

கடந்த இரு மாதங்களில் இந்தியாவினால் வழங்கப்பட்ட 370 மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருத்துவ உதவியின் ஒரு பகுதியாக இத்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ்களுடன் இச்சேவை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அச்சேவைக்கு ஆதரவு வழங்கிவருகின்றமை குறித்து மகிழ்வடைகின்றோம்." என்று பதிவிட்டுள்ளது 

இதற்கிடையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட இந்த நிதியை தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக பயன்படுத்த அதிபர்  அதிபர் கோத்தபய ராஜபக்சே  தெரிவித்துள்ளார்.