அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்..!! அதிரடியாக மறுத்த உச்சநீதிமன்றம்!!

Tamil nadu Supreme Court of India Madras High Court
By Karthick Nov 08, 2023 01:35 PM GMT
Report

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வழக்கு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, ஆதிசிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

cant-ban-order-of-all-castes-becoming-priest-sc

அப்போது, ஆகம விதிப்படிகளின் படி பயிற்சி பெற்றவர்களே கோயில்களில் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் அவ்வாறு இருக்கையில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஏன் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியது. மேலும், வழக்கை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது. இந்த வழக்கு,  இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மசோதாக்களை ஆய்வு செய்ய...ஆளுநருக்கு அதிகாரம் உண்டு..!உச்சநீதிமன்றம் அதிரடி!!

மசோதாக்களை ஆய்வு செய்ய...ஆளுநருக்கு அதிகாரம் உண்டு..!உச்சநீதிமன்றம் அதிரடி!!

தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறியுள்ளார் என மனுதாரர் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் கோயில்களை அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறினால், இது குறித்து பிரதமரிடம் செல்லுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மறுத்த உச்சநீதிமன்றம்

மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

cant-ban-order-of-all-castes-becoming-priest-sc

இந்த வழக்கை தொடர்ந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.