திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு நிறுத்தி வைப்பு! என்ன காரணம்?

Nilgiris Lok Sabha Election 2024
By Swetha Mar 28, 2024 10:05 AM GMT
Report

திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு பரிசீலணையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆ.ராசா

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ளது . தமிழக அரசியல் காட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு நிறுத்தி வைப்பு! என்ன காரணம்? | Candidates Nominations Held Up In Nilgiris

அதன் அடிப்படையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

யார் மனுவை முதலில் பெறுவது? ஒரே சமயத்தில் வந்த சேகர்பாபு-ஜெயக்குமார்; இரு தரப்பும் வாக்கு வாதம்!

யார் மனுவை முதலில் பெறுவது? ஒரே சமயத்தில் வந்த சேகர்பாபு-ஜெயக்குமார்; இரு தரப்பும் வாக்கு வாதம்!

மனு நிறுத்தி வைப்பு

இந்நிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை மாவட்ட ஆட்சியரான அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பாஜக வேட்பாளர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரது மனுக்கள் பரிசீலனை செய்த பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு நிறுத்தி வைப்பு! என்ன காரணம்? | Candidates Nominations Held Up In Nilgiris

இதையடுத்து, திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் மனுவில் சில பிழைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததால் அவரது வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், நீலகிரி தொகுதியில் தாக்கலான 33 வேட்பு மனுக்களையும் முழுமையாக பரிசீலித்த பிறகு தான், திமுக, அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.