விவாகரத்துக்கு பின் மனைவியோடு டூர் போன ஜஸ்டின் ட்ரூடோ - இப்படியொரு காரணமா?
மனைவியை பிரிந்த பின்னரும் அவரோடு பிரதமர் சுற்றுலா சென்றுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமராக இருந்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திடீரென தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரியப்போவதாக அறிவித்தார். அதனையடுத்து, பசிபிக் மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறைக்குச் சென்று திரும்பினார்.
சுற்றுலா
தொடர்ந்து, கார்ன்வாலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கனடா மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கடந்த சில வாரங்களாக உங்களுடைய அன்பான வாழ்த்துகளுடனும், உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்ததைக் குறிப்பிட்டும் தனிப்பட்ட மெசெஜ்கள் அனுப்பி இருந்தீர்கள்.
அவை பாசிட்டிவாகவும் அற்புதமாகவும் இருந்தன. குழந்தைகள் மீது கவனம் செலுத்தவும், ஒன்றாக இருப்பதில் கவனம் செலுத்தவும், அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறவும் கடந்த 10 நாட்களை செலவிட்டேன்.
எனது தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளித்து நடந்துகொண்ட அனைத்து கனடியர்களுக்கும் நன்றி. உங்கள் ஆதரவு நம்பமுடியாதபடி இருந்தது” எனப் பேசியுள்ளார்.