3 குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியை விட்டு பிரிந்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..!
கனடா பிரதமராக இருந்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி விட்டு பிரிவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மனைவியை விட்டு பிரிவதாக அறிவிப்பு
கனடா பிரதமராக இருந்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். 18 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது பிரிந்துள்ளனர்.
இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக பதிவிட்டுள்ளார். பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அப்பா பியர்ரி ட்ரூடோவும் தனது மனைவி மார்கரெட்டை கடந்த 1979 -ல் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.