700 இந்திய மாணவர்களை வெளியேற்றும் கனடா - நடவடிக்கை நிறுத்திவைப்பு!
இந்திய மாணவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை கனடா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்திய மாணவர்கள்
போலியான சேர்க்கை கடிதம் வழங்கிய காரணத்தால் 714 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என கனடா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து, இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இந்திய அரசாங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உலக பஞ்சாபி சங்கங்களின் சர்வதேச தலைவரும், ஆம் ஆத்மி எம்.பி.யுமான விக்ரம்ஜித் சிங் சானே, கடிதம் ஒன்றை கனடா அரசுக்கு அனுப்பினார். அதில், மாணவர்கள் மோசடி செய்யவில்லை.
கனடா அரசு
அவர்களுக்கு போலி கடிதங்களை கொடுத்து ஏஜென்ட் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதங்களை சரிபார்க்காமல் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய மாணவர்கள் கனடாவுக்குள் நுழைய குடியுரிமைத்துறையும் அனுமதித்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இந்திய மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கனடா அரசு நிறுத்தி வைத்துள்ளது.