டீச்சரா நீங்க? கனடா அழைக்கிறது - யாருக்கெல்லாம் ஆஃபர் இருக்கு தெரியுமா!
ஆசிரியர்களை வரவேற்க தயாராக இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
கனடா
கனடாவில் பல்வேறு துறைகளில் பணியாற்ற வெளிநாட்டினர் செல்கின்றனர். இந்த ஆண்டு ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான உதவியாளர்கள், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியாளர்கள்,
சமையல்காரர் ஆகியோருக்கு அங்கு முக்கியத்துவம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM - Science, Technology, Engineering, Mathematics) துறையில் அனுபவம் பெற்றவர்களையும், தொழில்துறை (Trades), விவசாயம், பிரஞ்சு மொழி திறமை கொண்டவர்களையும் இந்நாடு வரவேற்க தயாராக உள்ளது.
ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம்
குறிப்பாக ஆசிரியர்களை பொறுத்த அளவில், மழலையர் பள்ளி, தொடக்க மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், கட்டிடக் கலைஞர்கள், கணினி மற்றும் தகவல் அமைப்புகள் மேலாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள்,
டெவலப்பர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் (data scientists) உள்ளிட்ட துறைகளுக்கு பெரிய அளவில் ஆட்கள் தேவைப்படுவதில்லை. அவர்களுக்கு பதிலாக காப்பீட்டு முகவர்கள் மற்றும் தரகர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.