அவர் இறப்புக்கும் இந்திய அரசுக்கும் நிச்சயம் தொடர்பு - உலக நாடுகளை ஒன்று திரட்டும் கனடா!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளார்.
கொலை விவகாரம்
சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம்.
கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கனடா கோரிக்கை
இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருக்கிறது. கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்திய பிரதமரிடம் பேசி இருக்கிறோம். விரைவில் இந்த கொலையின் பின்புலத்தை வெளியே கொண்டு வருவோம். இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவர் காலிஸ்தானி சார்பு தலைவர் நிஜார் கொலையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோரிடம் எழுப்பினார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவை கண்டிக்க வேண்டும். இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.