பதவி விலகும் பிரதமர்; இந்த வாரமே ராஜினாமா? பரபரப்பு தகவல்!
கனடா பிரதமர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் இந்த ஆண்டு அக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசை ஆதரித்து வந்த
புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துதில் இருந்து அவருக்கு நெருக்கடி அதிகமாகிவிட்டது. ஏற்கனவே ட்ரூடோ சர்வதேச அளவில் நெருக்கடிகளை ந்தித்து வரும் நிலையில் உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ராஜினாமா?
முன்னதாக ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து துணை பிரதமரும், நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால் அவர் இன்றைக்கோ இல்லை இந்த வாரத்திலோ தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று தகவல்கள வெளியாகியுள்ளது. வரும் 8ஆம் தேதி லிபரல் கட்சி கூட்டத்தை கூட்டும். அந்தக் கூட்டத்தில், இடைக்கால பிரதமர் யார்? கட்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.