2 புதிய மாவட்டங்களை அறிவித்த சீனா; இனி லடாக் ட்ரிப் கேன்சலா? இந்தியா பதிலடி!
லடாக் பகுதியில் புதிதாக 2 கவுண்ட்டி மாவட்டங்களை சீனா அறிவித்துள்ளது.
வாலாட்டும் சீனா
அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த 2021இல் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கியது.
தொடர்ந்து 2023ல் புதிய மேப்பை வெளியிட்டது. அதில் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அந்த இடங்களுக்கு ‛அக்ஷயா சின்' என பெயர் வைத்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசத்தையொட்டிய இடுத்தில் திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 11 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
இந்தியா எதிர்ப்பு
இந்நிலையில் லடாக் மற்றும் திபெத் எல்லையில், வடமேற்கு சீனாவுக்கு உட்பட்ட ஜின்ஜியாங் உய்குர் என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஹோட்டன் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் ஹீயான் மற்றும் ஹீகாங் என்ற இரண்டு புதிய மாவட்டங்களை சீனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரங்தீர் ஜெய்ஸ்வால், சீனா அறிவித்துள்ள இரண்டு புதிய மாவட்டங்கள், லடாக் பகுதிக்குள் வருகின்றன. சீனாவின் இதுபோன்ற சட்டவிரோத ஊடுருவல்களை, நாம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. புதிய மாவட்டங்களை அறிவிப்பது, அப்பகுதியின் மீதான நம் இறையாண்மை தொடர்பான நிலைப்பாட்டை பாதிக்காது.
சீனாவின் சட்டவிரோத மற்றும் பலவந்தமான ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்கிடையாது. இது குறித்து நம் எதிர்ப்பை துாதரக அளவில் வெளிப்படுத்தி உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.