இந்தியர்களுக்கு சாதகமாக கனடா அசத்தல் முடிவு; உடனே வேலை - இது மட்டும் போதும்.!
தங்கள் நாட்டில் பணிபுரிய புதிய திட்டத்தை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.
எச்1பி விசா
அமெரிக்காவின் அண்டை நாடான கனடா எச்1பி விசா தொடர்பாக இந்தியர்களுக்கு சாதகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசு வழங்கும் எச்1பி விசா வைத்திருக்கும் 10,000 பேர் தங்கள் நாட்டில் வந்து பணிபுரியும் வாய்ப்பை கனடா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், Open Work Permit Stream என பணி அனுமதியை வழங்குவதாக அந்நாட்டு அமைச்சர் ஷான் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார். எச்1பி விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் கனடாவில் பணிபுரியலாம்.
கனடா முடிவு
அவர்களின் நேரடி குடும்ப உறுப்பினர்களும் வேலை அல்லது கல்வி நிமித்தமாக உடன் தங்கலாம். ஜூலை 16ஆம் தேதி முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. உலகின் தலை சிறந்த திறமையாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிய ஏதுவாக குடியேற்ற விதிகள் இந்தாண்டுக்குள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் பலர் எச்1பி விசா வைத்திருக்கும் நிலையில், அங்கு சிறந்த வாய்ப்பை பெறுவார்கள் என கருதப்படுகிறது. இருப்பினும் இந்த விசா விண்ணப்பம் குறித்த விரிவான நெறிமுறைகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.