அதுக்கு தோனி தான் காரணம்.. இல்லன்னா சச்சினால முடிஞ்சுருக்காது - பிரபல வீரர் பளீச்!

MS Dhoni Sachin Tendulkar Cricket Sports T20 World Cup 2024
By Jiyath Jun 15, 2024 12:56 PM GMT
Report

இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி குறித்து கனடா வீரர் ஆரோன் ஜான்சன் பேசியுள்ளார்.

கனடா அணி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கத்துக்குட்டி அணியாக களமிறங்கிய கனடா, சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. ஆனாலும், அயர்லாந்து அணியை துவம்சம் செய்து முதல் வெற்றியை பதிவுசெய்தது.

அதுக்கு தோனி தான் காரணம்.. இல்லன்னா சச்சினால முடிஞ்சுருக்காது - பிரபல வீரர் பளீச்! | Canada Cricketer Aaron Johnson About Ms Dhoni

அதேபோல், குறைவான ரன்கள் அடித்த போதிலும் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளுக்கு எதிராக 17 ஓவர் வரை வெறிக்காக போராடியது. மேலும், தங்களது கடைசி லீக்கில் இந்திய அணியுடன் இன்று மோதுகிறது.

சிக்கலில் இந்திய அணி; விராட் கோலியால் பெரும் கவலை - பிளேயிங் 11-ல் மாற்றம்?

சிக்கலில் இந்திய அணி; விராட் கோலியால் பெரும் கவலை - பிளேயிங் 11-ல் மாற்றம்?

ஆரோன் ஜான்சன் 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி குறித்து கனடா வீரர் ஆரோன் ஜான்சன் பேசியுள்ளார். அவர் கூறுகையில் "இந்திய கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால், தோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர்.

அதுக்கு தோனி தான் காரணம்.. இல்லன்னா சச்சினால முடிஞ்சுருக்காது - பிரபல வீரர் பளீச்! | Canada Cricketer Aaron Johnson About Ms Dhoni

இளம் படையை கொண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளார். தோனி இல்லையென்றால் சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க மாட்டார் என்பது என் தனிப்பட்ட கருத்து" என்று தெரிவித்துள்ளார்.