காசே இல்லனாலும் ரூ.10 ஆயிரம் வரை ATM'ல எடுக்கலாம்.? மத்திய அரசின் அசத்தல் வசதி..!
மத்திய அரசு சார்பில் ஜன்தன் வங்கி கணக்குகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
ஜன்தன்
இந்த அக்கௌன்ட்டை புதியதாக தங்கள் வங்கியில் திறக்கும் வாடிக்கையாளர்கள் அந்த வங்கியில் ஓவர் டிராப்ட் (Over Draft) வசதி உள்ளதா? என முதலில் தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும்.
ஓவர் டிராப்ட் வசதி என்பது வங்கி அளிக்கும் கடனாகும். இது அக்கௌன்ட் வைத்திருப்பவரின் கணக்கின் பயன்பாட்டின் வைத்து மாறக்கூடும்.
சிலருக்கு 10 ஆயிரம் ரூபாயும், சிலருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதற்கு வங்கிக்கு சென்று வங்கியின் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்தேல்லாம் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
நேராக சென்று வங்கியின் ATM மையங்களிலேயே இந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். எனினும் ஜன்தன் கணக்கை முறையாக சில மாதங்கள் பராமரித்த பின்னரே இந்த வசதியைப் பெற முடிகிறது.