சென்னை வாசிகள்...வெறும் கண்ணிலே விண்வெளி மையத்தை பார்க்கலாம்!! நாசா அறிவிப்பு
இன்று இரவு சர்வதேச விண்வெளி மையத்தை சென்னை வாசிகள் காணலாம் என நாசா அறிவித்துள்ளது.
வானம் எப்போதும் மக்களுக்கு ஆர்வத்தை உண்டாகும் விஷயம் தான். வானத்தை பார்த்தபடி இரவில் அதிக நேரத்தை செலவிடுபவர்களும் அதிகம்.பலருக்கும் வானம் என்ற பெரும் அலாதி தான். ஆனால், விண்வெளி பயணம் என்பது இன்னும் அச்சம் தரும் விஷயமாகவே இருக்கின்றது.
விண்வெளி குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் சூழலில், அங்கே விண்வெளி நிலையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.பல நாடுகளின் கூட்டமைப்பில் இந்த பூமியை குறித்து அறிந்துகொள்ளவும், விண்ணை குறித்து மேலும் அறிந்து கொள்ளவும் பல ஆரய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையமானது பூமியை சீரான வேகத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறது. ஆராய்ச்சிக்காக செல்லும் விண்வெளி வீரர்கள் வாழவும், பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய இடமாக இந்த விண்வெளி மையம் உள்ளது.
இந்த சர்வதேச மையத்தை சென்னை வாசிகள் இன்று மாலை வெறும் கண்ணிலேயே பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி, இன்று இரவு 7.09 மணியில் இருந்து சுமார் 7 நிமிடங்களுக்கு இந்நிகழ்வு இருக்கும் என நாசா அறிவித்துள்ளது.

இந்தியா கைகளில் எடுத்துள்ள முக்கிய ஆயுதம்? கொம்பேறிமூக்கனாக மாற இருக்கும் இந்திய உளவுப் படை!! IBC Tamil
